குந்தா அருகே விவசாயிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்


குந்தா அருகே விவசாயிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:30 AM IST (Updated: 22 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

குந்தா அருகே விவசாயிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி

கோத்தகிரி

மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் குந்தா அருகே உள்ள அட்டுபாயில் கிராமத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிராம தலைவர் பீமா கவுடர் தலைமை வகித்தார். இந்திய தேயிலை வாரிய செயல்இயக்குனர் முத்துக்குமார் மற்றும் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத் தலைவர் தும்பூர் ஐ போஜன், துணைத் தலைவர் கீதா குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், சிறு தேயிலை விவசாயிகள் 25 பேர் கொண்ட குழு அமைத்தால், அவர்களுக்கு எடையிடும் எந்திரம், சாக்கு பைகள், தேயிலை கொள்முதல் செய்யும் இடம் ஆகியவற்றை வாங்குவதற்கு மானியம் அளிக்கப்படும். அதேபோல விவசாய பயன்பாட்டிற்காக லாரிகள் வாங்கும்போது அதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த விவசாய குழுகளுக்கு சுழல் நிதியாக 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என்றார்.

விவசாய பொறியியல் துறை பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் தேயிலை வாரிய கள ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். இதில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story