அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கொள்ளிடத்தில் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று துளசேந்திரபுரம் தொடக்கப்பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு தங்கசேகர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கமலநாதன் வரவேற்றார். விஜயகுமார், செல்வம் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கண்ணன் கலந்து கொண்டு கூட்டத்தின் பொருள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6,7,8 வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில்விரிவுபடுத்த வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் அதனை நீக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்து மீண்டும் அனைத்து ஆசிரிய இயக்கங்களையும் அழைத்து பேசி ஆலோசனை நடத்தி முடிவெடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசிரியர் நல்லமணி நன்றி கூறினார். கூட்டத்தில் கண்ணன், கோவிந்தராஜன், ஜெயமூர்த்தி, சங்கர், கார்த்திகேயன், ராஜரத்தினம், ரஞ்சித்குமார், ராமலிங்கம், வேல்முருகன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.