வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்


வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
x

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் பி.டி.பி.சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஏ.ஆசாத், மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி பேரூராட்சி பஸ்நிலையத்திற்குள் அனைத்து அரசு பஸ்களும் வந்து செல்ல பேரூராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் போக்குவரத்து அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது, அரசு பஸ்கள் பேரூராட்சி பஸ்நிலையத்திற்கு வந்து செல்லாமல் புறவழிச்சாலையில் செல்வதற்கு உடந்தையாக செயல்படும் நாகர்கோவில் போக்குவரத்து கழக துணை வணிக மேலாளர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் வணிகர் நலச்சங்க நிர்வாகிகள் சேதுராமலிங்கம், ஆனந்த், வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் தவசிராஜன், பணகுடி வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன், துணைத் தலைவர் ராஜேந்திரன், பசுமை இயக்கம் தலைவர் சித்திரை, பசுமைகரங்கள் தலைவர் மலையாண்டி, ஏர்வாடி எம்.எச்.முகைதீன், ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story