உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம்


உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்டை கூட்டுரோட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

பகண்டை கூட்டுரோட்டில் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும், ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிகள் முடிந்தால் மட்டுமே, புதிய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றி, மாவட்டத்தில் முதன்மை ஒன்றியமாக ரிஷிவந்தியம் அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அசோக்குமார், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம், துணை வட்டார வளர்ச்சி் அலுவலர் தினகர்பாபு, மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தீபாஅய்யனார், தனலட்சுமி கோவிந்தன், கீதா சுகுமாறன், கோமதி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story