குரூப்-2 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


குரூப்-2 தேர்வு முன்னேற்பாடு  பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x

குரூப்-2 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.

ஈரோடு

ஈரோடு:

குரூப்-2 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.

குரூப்-2 தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசியதாவது:-

குரூப்2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு, நாளை (சனிக்கிழமை) காலை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 117 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. தேர்வில் பங்கேற்போர் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9 மணிக்கு மேல் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

8 பறக்கும் படை

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு2, 2ஏ (நேர்முக தேர்வு பதவிகள் மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வில் 35 ஆயிரத்து 619 பேர் பங்கேற்கின்றனர். ஒரு தேர்வு மையத்தில் 400 தேர்வாளர்கள் தேர்வு எழுதுவர். தேர்வை கண்காணிக்க, 8 பறக்கும் படை அலுவலர்கள், 29 நடமாடும் குழு, 120 ஒளிப்பதிவாளர்கள், 234 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.

மாவட்ட போலீஸ் துறை மூலம், ஈரோடு மாவட்ட கருவூலத்தில் வினாத்தாள், விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு அன்று மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் உதவியுடன் வினாத்தாள், விடைத்தாள் நடமாடும் குழு வாகனங்களில் எடுத்து செல்லப்படும். தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, டி.என்.பி.எஸ்.சி., பிரிவு அலுவலர் வெங்கடேஷ், உதவி பிரிவு அலுவலர்கள் மோகன்தாஸ், சவுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story