ஜமாபந்தி முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்


ஜமாபந்தி முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொற்செல்வி, துணை தாசில்தார் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் சரக ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வருகிற 24,25,26 ஆகிய தேதிகளில் வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு மற்றும் வருவாய் கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அதன் தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகத்தின் கீழ் நடைபெற்று வரும் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவது குறித்து விரிவான ஆய்வு செய்வதோடு திட்டத்திற்குரிய பயனாளிகளை அடையாளம் காணும் வகையில் உரிய பட்டா வழங்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், திட்ட பயனளிகளுக்கான 150 பேருக்கு பட்டா வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது.

1 More update

Next Story