புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் மண்டல அபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்


புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் மண்டல அபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்
x

புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் 48-ம் நாள் மண்டல அபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. மண்டலாபிஷேகம் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 48 நாள் நிறைவு பெறுகிறது. மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான ஆலோசனை கூட்டம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பணி குழு தலைவரும், நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை வைத்தார். திருப்பணிக்குழு துணைத் தலைவர் அண்ணாவேலு, திருப்பணிக்குழு துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கட்டுப்பட்ட அனைத்து ஊர் கொத்துக்காரர்கள், புகழூர் வட்டார ஆன்மிக நண்பர்கள், திருப்பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கலந்து கொண்டு 48 -ம் நாள் மண்டலாபிஷேகத்தை எவ்வாறு சிறப்பாக நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை தெரிவித்தனர்.


Next Story