வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
இலுப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
இலுப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பான கருத்துகளை தெரிவித்தனர். மேலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள், வருவாய்துறையினர், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story