ஸ்ரீ மதுரை அரசு பள்ளிக்கூடத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்
ஸ்ரீ மதுரை அரசு பள்ளிக்கூடத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்
நீலகிரி
கூடலூர்
கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பெரும் பங்காற்றி வருகிறது. நுகர்வோர் கலாச்சாரம் மாறி வருவதால் அடிப்படைத் தேவைகளை தாண்டி ஆடம்பர தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் நிலை ஏற்படுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது.
Related Tags :
Next Story