வீட்டுக்கடனுக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்காத வங்கி:பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்


வீட்டுக்கடனுக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்காத வங்கி:பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்
x

வீட்டுக்கடனுக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்காத வங்கி: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு.

நாமக்கல்

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி, சேலம் மேற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், திருச்செங்கோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் வீடு கட்ட கடன் வாங்கினார். அவரது பெயரில் இன்சூரன்ஸ் எடுக்க ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 510-ம் சேர்த்து மொத்தம் ரூ.16 லட்சத்து 51 ஆயிரத்து 510 கடன் வாங்கியதாக வங்கியில் கடன் கணக்கு தொடங்கப்பட்டது. இதற்கிடையே பெரியசாமி இறந்து விட்டார். அவரது இறப்புக்கு பிறகு வீட்டுக்கடனை நிலுவை தொகையுடன் கட்டக்கோரி பெரியசாமி மனைவி சாந்திக்கு, வங்கியில் இருந்து நோட்டீசு வந்தது. அதற்கு சாந்தி, என்னுடைய கணவர், அவரது பெயரில் இன்சூரன்சுக்கு பணம் செலுத்தி உள்ளார். எனவே இன்சூரன்ஸ் தொகை மூலம் வீட்டுக்கடனை வரவு வைத்து விட்டு, வீட்டுக்கான ஆவணங;களை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவே, சாந்தி, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில் வீட்டுக்கடன் வாங்கிய பெரியசாமி இன்சூரன்சுக்காக பணம் செலுத்தியும் அதற்கான பாலிசி எடுக்காதது வங்கியின் சேவை குறைபாடு. எனவே கடன் தொகையை தள்ளுபடி செய்துவிட்டு அசல் ஆவணங்களையும், தடையில்லா சான்று, நிலுவையில்லா சான்று ஆகியவைகளையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்கிட வேண்டும். வீட்டுக்கடன் ஒப்பந்தத்தை ரத்து செய்து அதற்கான ஆவணங்களை சாந்தியிடம் ஒப்படைக்க வேண்டும். சாந்திக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.5 லட்சம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரம் சேர்த்து வழங்கிட வேண்டும் எனவும் நீதிபதி ராமராஜ் தீர்ப்பில் கூறியுள்ளார்.


Next Story