நுகர்பொருள் வாணிப கழக ஒப்பந்த லாரி டிரைவர் சாவு
நாகூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து நுகர்பொருள் வாணிப கழக ஒப்பந்த லாரி டிரைவர் உயிரிழந்தார்.
நாகூர்:
நாகூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து நுகர்பொருள் வாணிப கழக ஒப்பந்த டிரைவர் உயிரிழந்தார்.
ஒப்பந்த டிரைவர்
திருகண்ணபுரம் வாழ்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சித்தி விநாயகம் (வயது38). இவர் பனங்குடியில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் லாாி டிரைவராக வேலை பார்த்து வந்தாா்.. இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பனங்குடி-திட்டச்சேரி சாலையில் சென்ற போது மாடு குறுக்கே வந்ததால் சித்தி விநாயகம் பிரேக் பிடித்துள்ளார். இதனால் அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்தி விநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சித்தி விநாயகத்துக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.