நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாதம் ரூ.4 ஆயிரம் ஊக்க ஓய்வூதியம் வழங்கக்கோரி நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் மாதம் ரூ.4 ஆயிரம் ஊக்க ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் நக்கீரன், ஐ.என்.டி.வி.சி. மாவட்ட தலைவர் மணிமாறன், சங்க நிர்வாகிகள் ஆனந்தன், சந்தானகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நுகர்வோர் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று ஊக்க ஓய்வூதியம் மாதம் ரூ.4 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
===
Related Tags :
Next Story