நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
நாகை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு துணை மேலாளர் ஹரி கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் நுகர் பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்வதை திரும்ப பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மையம் ஆக்க கூடாது.கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாமல், அதற்கான இழப்பை ஊழியர்களிடம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் சுமை தூக்குவோரை நியமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை ஒப்பந்தப்படி நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story