சமையல் கியாஸ் சிலிண்டர்களை எடை போட்டு கொடுக்க நுகர்வோர்கள் வலியுறுத்தல்


சமையல் கியாஸ் சிலிண்டர்களை எடை போட்டு கொடுக்க நுகர்வோர்கள் வலியுறுத்தல்
x

வாடிக்கையாளர்களின் கண்முன்னே சமையல் கியாஸ் சிலிண்டர்களை எடை போட்டு கொடுக்க வேண்டும் என நுகர்வோர்களுக்கான குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

வாடிக்கையாளர்களின் கண்முன்னே சமையல் கியாஸ் சிலிண்டர்களை எடை போட்டு கொடுக்க வேண்டும் என நுகர்வோர்களுக்கான குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். இதில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், செங்கம் பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நகர் பகுதிகளில் வீடுகளுக்கே சென்று சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றனர். ஆனால் கிராமப்பகுதிகளில் வீடுகளுக்கு கொண்டு வருவதில்லை. எனவே கிராமப்புற பகுதிகளுக்கும் வீடுகளுக்கே கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும். மேலும் சிலிண்டர் வினியோகம் செய்யும் வாகனங்களில் எடை மெஷின் வைத்திருக்க வேண்டும்.

எடை போட வேண்டும்

வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் போது அவர்கள் கண் முன்னே சிலிண்டரை எடை போட்டு கொடுக்க வேண்டும்.

பெட்ரோல் பங்குகளில் தரமற்ற பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்காக கடைகளில் பயன்படுத்துகின்றனர். அது தொடர்பாகவும் அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

கலெக்டர் தலைமையில் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட வேண் டும். சிலிண்டர்களுக்கான மானியத்தை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பதில் அளித்த அதிகாரிகள் இது குறித்து அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story