பல்லாவரம் அருகே மின்கம்பியில் உரசி கன்ெடய்னர் லாரி தீப்பிடித்தது


பல்லாவரம் அருகே மின்கம்பியில் உரசி கன்ெடய்னர் லாரி தீப்பிடித்தது
x

பல்லாவரம் அருகே மின்கம்பியில் உரசி கன்ெடய்னர் லாரி தீப்பிடித்த போது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

செங்கல்பட்டு

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே நாகல்கேணியில் உள்ள தனியார் குடோனுக்கு பெயிண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் 18 டன் மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இர்பான்(வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை நாகல்கேணிக்கு வந்தபோது, கன்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின்அழுத்த கம்பி உரசியது. இதில் கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து கன்டெய்னர் பெட்டியில் இருந்த மூலப்பொருட்கள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் இர்பான், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், மின்வாரிய அதிகாரிகள் உதவியுடன் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, கன்டெய்னர் பெட்டியில் எரிந்த தீயை சுமார் ஒரு மணிநேரம் போராடி அணைத்தனர். எனினும் லாரியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. உடனடியாக கீழே இறங்கிவிட்டதால் டிரைவர் இர்பான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story