மணலி விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


மணலி விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

மணலி விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் போக்குவரத்து போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

திருவள்ளூர்

சென்னை மணலி விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர், காக்கி சீருடை அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் அவருக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் 500 ரூபாய் ஆபராதம் விதித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணலி விரைவு சாலை எம்.எப்.எல். சந்திப்பில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போக்குவரத்து போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கன்டெய்னர் லாரி டிரைவர்களிடம் ேபாலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காக்கி சீருடை அணியாமல் கன்டெய்னர் லாரிகளை இயக்குவதற்கு அனுமதி அளிப்பதாகவும், 'நோ பார்க்கிங்கில்' லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தால் லாரி உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து அபராதம் விதிப்பதாகவும் கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story