கன்டெய்னர் லாரி மோதி 2 போலீசார் காயம்


கன்டெய்னர் லாரி மோதி 2 போலீசார் காயம்
x

ஆம்பூர் அருகே பழுதாகி நின்ற லாரி குறித்து விசாரணை செய்ய சென்ற போது வேன் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

லாரி மோதி காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோர் ரோந்து வேனை நிறுத்திவிட்டு விசாரணை செய்ய நடந்து சென்றனர்.

அப்போது திடீரென பின்னால் வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி போலீஸ் ரோந்து வேனின் மீது மோதியதுடன் நடந்து சென்ற போலீசார் மீதும் மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இது குறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் காயம் அடைந்த போலீஸ்காரர்கள் இருவரையும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story