ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன்... ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட போராட்டம் தொடர்கிறது. தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் மட்டும் நின்று போட்டியிடுகிறேன். களத்தில் நின்று வென்று காட்ட முடிவெடுத்துள்ளேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். நிறைய தொகுதிகள் கொடுக்க முன்வந்தும் இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story