தொடர் விடுமுறை எதிரொலி: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறை எதிரொலி: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள். இந்த நிலையில் தொடர் விடுமுறையின் காரணமாக கொடிவேரி அணையில் ேநற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அங்கு ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அங்கு விற்கப்படும் சூடான மீன் வறுவல்களை வாங்கி ருசித்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த உணவு பதார்த்தங்களை பூங்காவில் வைத்து சாப்பிட்டனர். சிறுவர்-சிறுமிகள் பூங்காவில் உள்ள சீசாக்களில் விளையாடினார்கள்.
Related Tags :
Next Story