மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா:'மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்' :அமைச்சர் பொன்முடி பேச்சு
மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் என்று மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
திருக்கோவிலூா்,
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சென்னையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அ தை தொடாந்து, மாவட்டங்களில் நடந்த விழாவில் அமைச்சர்கள் கலந்து கலந்து கொண்டு, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அந்த வகையில், அரகண்டநல்லுார் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே நடந்த விழாவுக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. க்கள் நா.புகழேந்தி, டாக்டர் ஆர்.லட்சுமணன், ரவிக்குமார் எம்.பி. ஒன்றியக்குழுதலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அ.சா.ஏ.பிரபு, கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன், ஆ.கூடலுார் எம்.ஆர்.ராஜீவ்காந்தி, அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராயல்.எஸ்.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி வரவேற்றார்.இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மகளிர்களுக்கு உரிமை தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டை கொடுத்து, இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கட்சி பாகுபாடின்றி தேர்வு
திராவிட மாடல் ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த அடிப்படையில்தான் கலைஞர் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
ஆணுக்கு பெண் சமம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய நோக்கம் ஆகும். இங்கு வழங்கப்படும் உரிமைத்தொகை தகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது. விடுபட்டவர்கள் திட்டத்தின்கீழ் தகுதி உடையவர்களாக இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம். கட்சி பாகுபாடு இன்றி இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிலர் இத்திட்டத்தை வேண்டுமென்றே குறை கூறுகின்றனர். வருமானத்திற்கு வழியில்லாமல் இருப்பவர்களுக்கு உதவவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ஆண்டுமுழுவதும் திட்டங்கள்
அதேபோல் காலை சிற்றுண்டி திட்டத்தையும் சிலர் கிண்டல் செய்தனர். காலையில் வேலைக்கு செல்லும் ஏழை வீட்டு பெற்றோர்களுக்கு தெரியும் அந்த திட்டத்தின் அருமை. எனவே இல்லாதவர்களுக்கு எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையில் இதுபோன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கலைஞர் நூற்றாண்டுவிழா கொண்டாடும் இந்த ஆண்டு முழுவதும் மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. எனவே யார் என்ன சொன்னாலும் அதனை பொருட்படுத்தாது, மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும்.
இவ்வறு அவர் பேசினார்.
கண்காட்சி அரங்கு
முன்னதாக விழா நடைபெற்ற வளாகத்தில் வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், திருக்கோவிலூர் நகர் மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் எம்.தங்கம், விஸ்வநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எம்.எஸ்.கே.அக்பர், விழுப்புரம் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வீரபாண்டி நடராஜன், அரசு வக்கீல் கார்த்திகேயன், டாக்டர் அன்சாரிராஜா. அரகண்டநல்லுார் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.சுந்தரமுர்த்தி, மணம்பூண்டி ஒன்றிய அவைத்தலைவர் சக்திசிவம், திருக்கோவிலுார் நகர செயலாளர் ஆர்.கோபிகிருஷ்ணன், அவைத்தலைவர் டி.குணா, முகையூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மணிவண்ணன், திருக்கோவிலுார் சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் என்.கே.வி.ஆதி நாராயணமுர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தாசில்தார் கற்பகம் நன்றி கூறினார்.