அரசுத்துறைகளில் நீடிக்கும் சிக்கன நடவடிக்கை...!


அரசுத்துறைகளில் நீடிக்கும் சிக்கன நடவடிக்கை...!
x

அரசுத்துறைகளில் கொரோனா காலத்தில் தொடங்கிய சிக்கன நடவடிக்கை தொடர்கிறது என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா காலத்தின்போது நிதிச்சுமையைக் குறைக்கத் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. நிதிப் பற்றாக்குறை நிலைமை தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதால் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் அரசுமுறை பயணமாக விமானத்தில் செல்ல அனுமதி வழங்கியதாகவும் அரசுப் பணியாளர்களுக்கான பயணப்படி, தினப்படியை ரத்து செய்த உத்தரவும் திரும்பப் பெறப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், அரசுத்துறைகளில் கொரோனா காலத்தில் தொடங்கிய சிக்கன நடவடிக்கை தொடர்கிறது எனவும் புதிய வாகனங்கள், பர்னிச்சர்கள் வாங்க தடை நீடிப்பதாக நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.


Next Story