தொடர்மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


தொடர்மழை எதிரொலி:  முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 763 கன அடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,334 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 134.55 அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 525 கன அடியாக இருந்தது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு: பெரியாறு 9.8, தேக்கடி 15, கூடலூர் 34.2, உத்தமபாளையம் 5.8, வீரபாண்டி 33.2, வைகை அணை 1.8, சோத்துப்பாறை 26, போடி 21.6, பெரியகுளம் 4, அரண்மனைபுதூர் 8.4, ஆண்டிப்பட்டி 16.2.


Related Tags :
Next Story