நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு சோலையாறு அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டியது- விவசாயிகள் மகிழ்ச்சி


நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு  சோலையாறு அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டியது- விவசாயிகள் மகிழ்ச்சி
x

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சோலையாறு அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சோலையாறு அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சோலையாறு அணை

வால்பாறை அருகே 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலு்ம லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

குறிப்பாக அணையில் இருந்து மின்உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் சரிந்தது. மேலும், கோடையின் காாணமாகவும் அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது.

கிடுகிடுவென உயர்ந்தது

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக வால்பாறையில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின. குறிப்பான நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இதேபோல் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்தது. குறிப்பாக கடந்த 1 மாதத்திற்கு முன்பு 25 அடியாக இருந்தது. ஆனால் கடந்த 25 நாட்களிலும் மட்டும் 80 அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 80.85 அடியாக உள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 327 கன அடிநீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

80 அடியை தாண்டியது

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சோலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் உள்ள மின் நிலையங்கள், பாசன விவசாய நிலங்கள், தேயிலை காபி தோட்ட விவசாயங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கான காலசூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் சமவெளிப்பகுதியில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணையிலிருந்து திறப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு கோடைகாலத்தில் கிடைத்த மழையின் அளவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 நாட்களில் சோலையாறு அணைக்கு 55 அடி தண்ணீர் கிடைத்து அணையின் நீர்மட்டம்பாதியளவான 80 அடியை தாண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story