தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்க 5-வது நாளாக தடை


தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்க 5-வது நாளாக தடை
x

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது.

அம்பாசமுத்திரம் வனக்கோட்ட மணிமுத்தாறு, மாஞ்சோலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 5-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story