ஆலங்குளம் பகுதியில் தொடர் மழை
ஆலங்குளம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்மழை
ஆலங்குளம், சுண்டங்குளம், கண்மாய்பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, கீழராஜகுலராமன், தொம்பகுளம், ரெட்டியபட்டி, கொங்கன்குளம். மேலபழையாபுரம், புளியடிபட்டி, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, பாரைப்பட்டி, உப்புபட்டி, மாதாங்கோவில்பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, குண்டாயிருப்பு, முத்துச் சாமிபுரம், கீழாண்மறைநாடு, லட்சுமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதேபோல நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு உரம் வைத்து இருக்கின்றனர். இந்த மழை பயிர்களுக்கு மிகவும் நல்லது ஆகும். தொடர்மழையினால் சிறிய குட்டைகள், ஊருணிகள் ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினா்.