ஆலங்குளம் பகுதியில் தொடர் மழை


ஆலங்குளம் பகுதியில் தொடர் மழை
x

ஆலங்குளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. ஆலங்குளம் ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, பெரியார்நகர், நேதாஜி நகர், அண்ணாநகர், பாரதிநகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஜெ.ஜெ.நகர் வசந்த்நகர், தேவர் நகர், இருளப்ப நகர், ஏ.டி.ஆர்.நகர். ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மழை பெய்தது. இதனால் கிராமங்களில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.


Related Tags :
Next Story