தொடர் மழை: கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்..!


தொடர் மழை: கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்..!
x

தொடர் மழையால் சென்னையில் இதுவரை 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.

சென்னை.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிடட் மாவட்டங்களில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்தது வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் 50 மி.மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது. கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகள் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. சென்னை, புறநகரில் பரவலாகப் பெய்த மழையால், காலை நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா பாலத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கார், இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழையால் சென்னையில் இதுவரை 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. செம்பியம், கொளத்தூர், தலைமைச் செயலகம், மைலாப்பூர், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புதுறையினர் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story