தொடர் மழை: பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவு


தொடர் மழை: பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவு
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் குவிவார்கள். ஆனால் தொடர் மழையால் பக்தர்கள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் மலைக்கோவில் , அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் கேரள மாநில பக்தர்கள் கூட்டம் மட்டும் இருந்தது. தொடர்மழையால் சாலைகள் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. மேலும் தொடர் மழையால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.


Next Story