தோகைமலை பகுதியில் தொடர் மழை: மானாவாரி நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி


தோகைமலை பகுதியில் தொடர் மழை: மானாவாரி நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி
x

தோகைமலை பகுதியில் தொடர் மழை பெய்து வருதால் இதனை பயன்படுத்தி மானாவாரி நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி தொடங்கி உள்ளது.

கரூர்

தொடர் மழை

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த மழையானது தற்போது சாகுபடி செய்து உள்ள சூரியகாந்தி, சக்கரைவள்ளி கிழங்கு, உளுந்து, கத்தரி, மல்லிகை, சோளம், கம்பு போன்ற சாகுபடி செய்த விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏதுவாக அமைந்து உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பருவ மழை பெய்யாமல் வறட்சி நிலவியதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்ததோடு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வந்தது.

உழவு பணி தொடங்கியது

இந்நிலையில் தற்போது கோடை பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதில் ஆற்றுவாரிகளில் அமைத்து உள்ள தடுப்பனைகள் மற்றும் குளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் பருவ மழை தொடர்ந்து பெய்யும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் எதிர்பார்த்து தங்களது விவசாய நிலங்களில் கோடை உழவை தொடங்கி மும்முராக அதற்கான பணிகள் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் அடுத்த உழவிற்கு பிறகு ஆடிப்பட்டம் விதைகளை மானாவாரி மற்றும் கிணற்று பாச நிலங்களில் பல்வேறு உணவு பயிர்களின் விதைகளை விதைக்க விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் பெய்து வரும் மழையினால் பொதுமக்களுக்கான குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக இருந்து வருகிறது.


Next Story