மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பலி


மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பலி
x

கந்தர்வகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பலியானார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரவம்பட்டி கிராமத்தில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தாலுகா சின்ன கந்திலி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 40) மற்றும் விஜயன், சாமிக்கண்ணு ஆகியோர் பழுது பார்க்கும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி பழுது பார்த்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் கேசவமூர்த்தி, மார்ட்டின் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பலியான சுப்பிரமணியன் குஜராத் மாநிலம் அசோசியேட் பவர் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story