ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா


ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா
x

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

தர்ணா போராட்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுமார் 140-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று பணியை புறக்கணித்து, ஏ.ஐ.டி.யு.சி. தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சிலம்புசெல்வி தலைமையில் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை. பிடித்தம் செய்யப்பட்டுள்ள அரியர் பணத்தை 58 மாதமாக வழங்காமல் நகராட்சி நிர்வாகம் இழுத்தடிக்கிறது.

பாதுகாப்பு உபகரணங்கள்...

மேலும் தூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களோ, சீருடைகளோ வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினர். காலையில் தொடங்கிய இந்த போராட்டம் மதியம் வரை நடைபெற்றது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டதையடுத்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story