ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்


ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Oct 2022 7:45 PM GMT (Updated: 19 Oct 2022 7:45 PM GMT)

மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

மேட்டூர்:-

மேட்டு நகராட்சியில் சுமார் 100 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உரிய சம்பளம் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதில்லை எனக்கூறி கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சின்னப்பார்க் அருகே ஒன்று கூடி அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story