ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி ஆவின்பால்பண்ணையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 5 மாதமாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்துள்ள தினக்கூலி ரூ.575-ஐ வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கூட்டுறவு பால்பண்ணை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் திருச்சி ஆவின் நிறுவன நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் மாறன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story