ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்


ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
x

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியை புறக்கணித்து போராட்டம்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் துப்புரவு பணி, பாதுகாவலர் பணி, பராமரிப்பு பணி என பல்வேறு பணிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தனியார் துறை மூலமாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலியை தனியார் ஒப்பந்த நிறுவனம் வழங்கிட வேண்டும். தீபாவளி போனஸ், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் நேற்று பணியினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் அனிபா மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், தனியார் ஒப்பந்த நிறுவன அலுவலர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story