பொதுமக்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் பொதுமக்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் பொதுமக்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறை
விருதுநகர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற உள்ளன.
முதல் கட்ட விண்ணப்ப பதிவு வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். 2-வது கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.
ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெற உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்காக விருதுநகர் கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்
பொதுமக்களுக்கு இந்த திட்டம் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசி எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
04562 252602 தாலுகா அலுவலக கட்டுப்பாட்டு அறை. டெலிபோன் எண்கள் ராஜபாளையம் 04563 220500, செல்போன் எண் 93840 95256, ஸ்ரீவில்லிபுத்தூர் 04563 260209, செல்போன் எண் 94450 00358, சிவகாசி 04562 224260, செல்போன் எண் 94450 00359, வத்திராயிருப்பு 04563 288800, செல்போன் 80563 30506.
சாத்தூர்
அருப்புக்கோட்டை 04566 220 219, செல்போன் 88255 53519, திருச்சுழி 04566 282222, செல்போன் 94450 00356, காரியாபட்டி 04566 255570, செல்போன் 90805 86480.
சாத்தூர் 04562 260220, செல்போன் 93840 95248, விருதுநகர் 04562 243493, செல்போன் 94450 00354, வெம்பக்கோட்டை 04562 284655, செல்போன் 94457 96454. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.