தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்றதால் தகராறு: நட்சத்திர ஓட்டலில் பாதுகாவலர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்றதால் தகராறு:   நட்சத்திர ஓட்டலில் பாதுகாவலர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியதால் ஏற்பட்ட தகராறில் கோவை நட்சத்திர ஓட்டலில் பாதுகாவலர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியதால் ஏற்பட்ட தகராறில் கோவை நட்சத்திர ஓட்டலில் பாதுகாவலர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நட்சத்திர ஓட்டல்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஜோடியாக வந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இரவு 8.30 மணி அளவில் விலை உயர்ந்த சொகுசு காரில் 4 பேர் அந்த நட்சத்திர ஓட்டலுக்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் தங்களை ஓட்டலில் உள்ள பாருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள், அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

தாக்குதல்

மேலும் தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இல்லை என்றால் உள்ளே செல்ல கூடாது என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும், பாதுகாவலர்களிடம் தகராறு செய்தனர். அதன்பிறகும் அவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதையடுத்து அவர்கள் 4 பேரும் சேர்ந்து அங்கிருந்த பாது காவலர்களை தாக்கினர். நட்சத்திர ஓட்டல் கேஷியர் விஷ்வபாரதி யும் தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் நட்சத்திர ஓட்டல் பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

4 பேர் மீது வழக்கு

இது் குறித்து நட்சத்திர ஓட்டல் கேஷியர் விஷ்வபாரதி (24) அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவையை சேர்ந்த ஜான்சன், டேவிட், லட்சுமணன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீது அத்துமீறி நுழைதல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story