மழலையர் பட்டமளிப்பு விழா


மழலையர் பட்டமளிப்பு விழா
x

பள்ளிக்கூடத்தில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ரியோனா பில்டர்ஸ் மற்றும் சோலார் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குனர் ஜூலியன்ராய், மதுரை பாத்திமா கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளின் தலைவர் மற்றும் மாணவர்களின் ஆலோசகர் லேபிள் ஜாஸ்மின் சோபா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பட்டங்களை வழங்கினர். பள்ளியின் தாளாளர் ராபர்ட் சிறப்புரையாற்றினார். பள்ளி முதன்மை முதல்வர் ஆனிமெட்டில்டா வாழ்த்துரை வழங்கினார். இதைத்தொடர்ந்து 2021-2022-ம் கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ், பதக்கம், கேடயம், தங்க நாணயம் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

1 More update

Next Story