பிறந்தநாள் விழாவில் நகை திருடிய சமையல் தொழிலாளி கைது
திசையன்விளை அருகே பிறந்தநாள் விழாவில் நகை திருடிய சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளம் காந்திநகரை சேர்ந்தவர் பூமாலை. இவருடைய மகள் இந்துமதி (வயது 23). இவரது அக்காள் மகன் 41-வது நாள் பிறந்தநாள் விழா காந்திநகரில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு சமையல் தொழிலாளியாக கூடங்குளம் அருகே உள்ள அடங்கார்குளத்தை சேர்ந்த பரமசிவன் (53) என்பவர் வந்து இருந்தார். அப்போது அவர் வீட்டில் பீரோவில் வைத்து இருந்த 4 பவுன் தங்க நகையை திருடிவிட்டதாக இந்துமதி, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரமசிவனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து திருடிச் சென்ற தங்க நகையையும் மீட்டார்.
Related Tags :
Next Story