மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொன்ற சமையல்காரர் கைது


மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொன்ற சமையல்காரர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்த சமையல்காரர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் வந்த தன்னை திட்டியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர்

மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்த சமையல்காரர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் வந்த தன்னை திட்டியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மூதாட்டி கொலை

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம்பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள் (வயது65). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனார்.

ஒரே மகன் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டார். இதனால் மூதாட்டி மயிலாத்தாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் மூதாட்டி மயிலாத்தாள் வயரால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு அவர் வசித்த சிறிய ஓட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கொலையாளியை பிடிக்க இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில், போலீஸ்காரர்கள் தாமஸ், குருசாமி, மற்றொரு வினோத்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

சமையல்காரர் கைது

கொலை நடந்த பின்னர், மூதாட்டியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த செல்வம் (வயது46) என்ற சமையல்காரர் காணாமல் போய் இருந்தார்.

இவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்தவர். இதைத்தொடர்ந்து செல்வத்தை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்தநிலையில் சென்னை அயனாவரத்த்தில் உள்ள செல்வத்தின் தம்பி வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

வாக்குமூலம்

அப்போது செல்வம் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், "மூதாட்டி மயிலாத்தாள் வீட்டில் ரூ.2 ஆயிரம் மாத வாடகையில் வசித்து வந்ததாகவும், அடிக்கடி குடித்துவிட்டு வந்ததாலும், வீட்டில் மதுபாட்டிலை கொண்டு வந்து குடித்ததாலும் மயிலாத்தாளுக்கு பிடிக்காமல் அடிக்கடி திட்டியுள்ளார்.

சம்பவத்தன்று குடிபோதையில் செல்வம் வீட்டுக்கு வந்தபோது, மூதாட்டி மயிலாத்தாள் திட்டியதால் ஆத்திரம் அடைந்து அங்கு கிடந்த வயரை எடுத்து கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு சென்னைக்கு தப்பிச்சென்றுவிட்டதாக "வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

செல்வம் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். கொலையாளியை கைது செய்த தனிப்படையை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.


Next Story