சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு..!


சமையல்  கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு..!
x

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது .தற்போது கேஸ் சிலிண்டர் விலை இன்னும் உயர்ந்துள்ளது .

அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகிறது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலைரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.


Next Story