பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கலெக்டர்


பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கலெக்டர்
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக 358 மனுக்கள் பெறப்பட்டன. மனுதாரர் முன்னிலையில் விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீரை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், தனிதுணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story