விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

பூதலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,மார்ச்.15-

பூதலூர் அருகே உள்ள வடுகண் புதுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய பண்ணையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ராசா பட்டியை சேர்ந்த சித்திரவேல் (வயது38) என்பவர் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு முன்பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு வராமல் இருந்ததால் பண்ணை முதலாளி அவரை கண்டித்துள்ளார். மேலும் மது அருந்திவிட்டு வேலைக்கு வரக்கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சித்திரவேல் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் இருந்த சித்திரவேலை பூதலூர் அரசு ஆஸபத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சித்திரவேல் உயிரிழந்தார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறாா்கள்.


Next Story