குன்னூரில் சுற்றுலா பேருந்து விபத்து: இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் தகனம்


குன்னூரில் சுற்றுலா பேருந்து விபத்து: இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் தகனம்
x
தினத்தந்தி 2 Oct 2023 4:42 AM IST (Updated: 2 Oct 2023 4:52 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் சுற்றுலா பேருந்து விபத்தில் இறந்தவர்களின் உடல்கள், அவர்களது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 61 பேருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன் தினம் சுற்றுலா வந்த பஸ், மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக இந்த பஸ் விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் பஸ்சுக்கு அடியில் சிக்கியிருந்த பாண்டித்தாய் என்பவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த ஊரான கடையம் கொண்டுவரப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக, இறுதிச்சடங்குகள் செய்து உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டன.


Next Story