குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி


குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி
x
தினத்தந்தி 4 Aug 2023 9:45 PM GMT (Updated: 4 Aug 2023 9:46 PM GMT)

குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே ஆக்கி போட்டி தனியார் பள்ளி சார்பில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு ஆக்கி போட்டியில் சாந்தி விஜயா பள்ளி அணி, ஆண்கள் பிரிவில் அருவங்காடு பாதுகாப்பு தொழிலாளர் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு போட்டியில் சாந்தி விஜயா பள்ளி அணி, ஆண்கள் பிரிவில் டிம்பர் டாப்ஸ் அணி வெற்றி பெற்றன. 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு போட்டியில் உபதலை அரசு பெண்கள் பள்ளி அணி, ஆண்கள் பிரிவில் அறிஞர் அண்ணா பள்ளி அணி வெற்றி பெற்றது. முன்னதாக இறுதி போட்டியை ஆக்கி நீலகிரிஸ் அமைப்பின் துணைத்தலைவர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.


Next Story