வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஆதார் எண் இணைத்தல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஆதார் எண் இணைத்தல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருத்தப்பணிகள்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தின் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 996 வாக்காளர்களும், சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 375 வாக்காளர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து64 ஆயிரத்து 118 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் ஆகிய பணிகளை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) முதல் 21.08.2023 வரை மேற்கொள்கின்றனர்.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
எனவே 1-1-2024யை தகுதிநாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத நபர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரினை சேர்த்திடவும், இதர வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்திடவும், இது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும்போது தேவையான விபரங்களை அளித்து ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.