கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்


கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க  மாவட்ட பேரவை கூட்டம்
x

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் தேனி மாவட்ட பேரவை கூட்டம் தேனியில் நடந்தது

தேனி

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் தேனி மாவட்ட பேரவை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஸ்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிச்சாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் கார்த்திக் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். துறை ஊழியர்களுக்கான பயிலரங்கை ஓய்வுபெற்ற ஊழியர்கள் சிவமணி மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் நடத்தினர்.

பொதுமக்களுக்கான அரசின் திட்டங்கள் சிறப்பாக நடக்க ஏதுவாக மாவட்டத்தில் தேவையின் அடிப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து நிலைகளிலும் நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை சங்கத்தின் மாநில செயலாளர் ராமகிருட்டிணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் அழகுராஜூ, மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்


Next Story