பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்


பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சப்-கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சப்-கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.170 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது வீட்டு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பாதாள சாக்கடையில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பிரச்சினைகளை சரி செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் பிரச்சினைகளை தீர்வு காண்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி பேசினார். பின்னர் நகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருதரப்பு பிரச்சினைகளையும் கூறினர். இதில் நகராட்சி பொறியாளர் குருசாமி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

ஒருங்கிணைந்து செயல்படுங்கள்

இதைத்தொடர்ந்து மாட்டு சந்தையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், டி.கோட்டாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சப்-கலெக்டர் பிரியங்கா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நகராட்சி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கூட்டங்கள் நடத்தி குறைகளை சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொண்ட நிறுவனம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை 5 ஆண்டுகள் செய்ய வேண்டும். இதற்கான அனுமதியை குடிநீர் வடிகால் வாரியம் வழங்க வேண்டும். தற்போது கடந்த 1-ந் தேதியிட்டு ஒரு அனுமதியை வழங்கி உள்ளனர்.

ஓட்டல்களுக்கு இணைப்பு

மேலும் கழிவுநீரேற்று, நீர்உந்து நிலையங்களை சரியாக இயக்க வேண்டும். பராமரிப்பு பணி மேற்கொள்ள வாகனங்களுக்கு கூடுதலாக டிரைவர்களை நியமிக்க வேண்டும். டி.கோட்டாம்பட்டியில் குளம் உள்ள பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த வீடுகளில் இருந்து கழிவுநீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் கூறினார்.

தற்போது 20 ஆயிரம் வீட்டு இணைப்புகளில் 7,599 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓட்டல் போன்ற வணிகம் சார்ந்த நிறுவனங்களில் விரைவில் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நவீன எந்திரம்

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

மாட்டு சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கலாம். இதற்கு குறைந்தது 35 சதவீத கழிவுநீர் வந்தால் தான் பணிகளை சரியாக மேற்கொள்ள முடியும். ஆனால் வீட்டு இணைப்பு கொடுக்க தாமதப்படுத்துவதால் தற்போது 1.40 மில்லியன் லிட்டர் கழிவுநீர் தான் வருகிறது. இருப்பினும் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை குழாயில் பிளாஸ்டிக், நாப்கின் போன்ற பொருட்களை போடுவதால் அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்புகளை நவீன எந்திரம் மூலம் நீக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story