காப்பர் வயர் திருட்டு
காப்பர் வயர் திருட்டு போனது.
புதுக்கோட்டை
அரிமளம் ஒன்றியம் துறையூர் ஊராட்சி கீரணிப்பட்டி மேல குடியிருப்பு பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மோட்டாருக்கு செல்லும் காப்பர் வயர் சுமார் 100 மீட்டரை மர்ம ஆசாமிகள் வெட்டி திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.7 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து துறையூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அரிமளம் ஒன்றியம் தல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியனுக்கு சொந்தமான காப்பர் வயரை மர்ம ஆசாமிகள் வெட்டி திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story