சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கிறது: 5 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கிறது: 5 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 2 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஓமலூர், தலைவாசல், ஏற்காடு, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும், திருவள்ளூரில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story