தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்


தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்
x

மதுரையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் இருக்க தடுப்பூசி, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.

மதுரை


மதுரையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் இருக்க தடுப்பூசி, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 459 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை.

மதுரையை பொறுத்தமட்டில், நேற்று 17 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. மதுரையிலும் உயிரிழப்பில்லை. 4 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:-

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நோய் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் அதிகமானோர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் 4 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

அவர்களில் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. லேசான பாதிப்பு தான். தினமும் 500 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

மதுரையில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. தனி மனித ஒழுக்கம், இடைவெளி தான் மீண்டும் கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை காக்கும்.

தடுப்பூசி

முன் களபணியாளர்களில் பெரும்பாலானர்வர்கள் 3-ம் கட்ட தவணை தடுப்பூசியை செலுத்தி விட்டார்கள். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3-ம் கட்ட தவணை தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

87 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 70 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. தகுதி உள்ள நபர்கள் நாட்களை கடத்தாமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


Next Story